சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் கூறிய நாசா..!


சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் கூறிய நாசா..!
x

சந்திரயான் 3 வெற்றிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சந்திரயான் 3 வெற்றிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான் 3 லேண்டரின் வெற்றிக்காக இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் "சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்!. நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 4-வது நாடான இந்தியாவுக்கு வாழ்த்துகள். இந்த பணியில் உங்கள் பங்காளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.


Next Story