நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு


நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு
x

Image Courtacy: ANI

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் நாளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காலை 11.10 மணி முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் 80 நிமிடங்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. அப்போது சோனியா காந்தியைப் பார்ப்பதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் மருத்துவமனை சென்றனர்

ராகுல் காந்தியிடம் என்ன கேள்விகளை கேட்பது என்பது குறித்து அமலாக்கத் துறையினர் ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர். அந்த கேள்விகளை வைத்து அவர்கள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தினர். ராகுல் காந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையானது சுமார் 9 மணி நேரம் நீடித்தது. இதன்படி இந்த விசாரணை இரவு 9.30 மணியளவில் நிறைவுபெற்றது.

இந்நிலையில் நாளையும் (ஜூன் 14) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.


Next Story