கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்


கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம்:  இந்திய தேர்தல் ஆணையம்
x

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீரத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், குஜராத் தேர்தலிலும் 5 இடங்களில் வென்றதன் மூலம் தேசிய கட்சி அங்கீகாரம் பெறும் தகுதியை பெற்று இருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் தேசிய கட்சியாக அங்கீகரித்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்க நினைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


Next Story