பெங்களூரு அருகே, போலி ஆதார் அட்டை தயாரித்த வங்காளதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது


பெங்களூரு அருகே, போலி ஆதார் அட்டை தயாரித்த  வங்காளதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே, போலி ஆதார் அட்டை தயாரித்த வங்காளதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி பகுதியில் போலி ஆதார் அட்டை தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, போலி ஆதார் அட்டை தயாரிக்கும் கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், மாதநாயக்கனஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்த ஜூவல் டாணா, மாதநாயக்கனஹள்ளியை சேர்ந்த விஜய்குமார் சிங், பெங்களூரு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த நவுசத் என்று தெரிந்தது.

வங்காளதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ஜூவல், மாதநாயக்கனஹள்ளி அருகே குதுரேகெரே பகுதியில் வசித்துள்ளார். அப்போது கம்ப்யூட்டர் சென்டர் நடத்தும் விஜய்குமாருடன், ஜூவலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர், ரூ.3 ஆயிரம் கொடுத்தால் ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து தருவதாக கூறியுள்ளார். அதன்படி, விஜய்குமார், ஜூவல் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்து, சாம்ராஜ்பேட்டையில் உள்ள பெங்களூரு ஒன் மையத்தில் பணியாற்றும் ஊழியர் நவுசத் மூலமாக ஆதார் அட்டையை பெற்றுக் கொடுத்தது தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடம் இருந்தும் போலி ஆதார் அட்டைகள், கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரிடமும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story