கொலிஜீயம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய சட்டத்துறை மந்திரி
நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு பேசினார்.
'நீதித் துறையின் உயர்நிலையில் நியமனங்கள் நிலுவையில் உள்ளன. அதற்குக் கொலிஜீயம் முறைதான் காரணம். நீதித் துறையின் உயா் நிலையில் நியமனங்களை விரைவுபடுத்த அந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது' என்றார்
Related Tags :
Next Story