நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது.. மாணவர்களிடம் கடும் கெடுபிடி, பரிசோதனை


நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது.. மாணவர்களிடம் கடும் கெடுபிடி, பரிசோதனை
x

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்காண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த நீட் தேர்வு நாடு முழுவது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிஅது. நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.20 மணி வரை நடக்கிறது.

தேர்வு எழுதவரும் மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச், துண்டு காகிதங்கள், கால்குலேட்டர், பெண்டிரைவ், செல்போன், புளூடூத், பர்ஸ், தொப்பி, ஏடிஎம் கார்டுகள், போன்றவை தேர்வு மையத்தில் கொண்டுசெல்லக்கூடாது என வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

மாணவர்களை பரிசோதித்த பின்னரே அவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story