நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாடு மாணவர் முதலிடம் - முதல் 10 இடத்தில் 4 பேர் தமிழ்நாடு மாணவர்கள்
இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு மாணவர் முதல் இடம் பிடித்துள்ளார்.
சென்னை,
இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் 99.99 சதவிகித மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த மாணவர் வருண் சக்ரவர்த்தியும் 99.99 சதவிகித மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல், நீட் நுழைவுத்தேர்வில் முதல் 10 இடத்தில் 4 தமிழ்நாடு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 44 பேர் நீட் நுழைவு தேர்வு எழுதிய நிலையில் அதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல், ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் உத்தரபிரதேசத்தில் இருந்து அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மராட்டியம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story