நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி


நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி
x

நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி பட்ஜெட் மதிப்பீட்டில் 83 சதவீதத்தை எட்டியது.

தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வருமான வரி ஆகியவை நேரடி வரிகள் எனப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் இதுவரை இந்த வரிகள் மூலம் ரூ.16 லட்சத்து 68 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த வசூலை விட 22.58 சதவீதம் அதிகம்.

அதே சமயத்தில், நடப்பு நிதியாண்டில் இதுவரை செலுத்த வேண்டிய வரியை விட அதிகமாக கட்டியவர்களுக்கு ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கோடி திருப்பித்தரப்பட்டுள்ளது (ரீபண்ட்). எனவே, அதுபோக நிகர நேரடி வரி வசூல் ரூ.13 லட்சத்து 73 ஆயிரம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த வசூலை விட 16.78 சதவீதம் அதிகம்.

கடந்த பட்ஜெட்டில், நேரடி வரிகள் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டதோ, அதில், 83.19 சதவீத தொகை இப்போதே கிடைத்து விட்டது.

நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 20 நாட்கள் இருப்பதால், பட்ஜெட் மதிப்பீடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story