நெட்டிசன்கள் நாங்கள் கூறும் கருத்துக்களை தீர்ப்பு என கருதுகின்றனர் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்

நெட்டிசன்கள் நாங்கள் கூறும் கருத்துக்களை தீர்ப்பு என கருதுகின்றனர் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்
x

கோப்புப்படம்

நீதிபதிகள் கூறும் கருத்துக்களை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் தீர்ப்பு என்று கருதுவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நீதிபதிகள் கூறும் கருத்துக்களை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் தீர்ப்பு என்று கருதுவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மாற்ற அனுமதி கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறும் கருத்துக்களை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் தீர்ப்பு என கருதுவதாகவும், நீதிபதிகள் தெரிவிக்கும் வாய்மொழி கருத்துக்களையும், பிறப்பிக்கும் உத்தரவுகளையும் பெரும்பாலான நேரங்களில் வேறுபடுத்தி பார்க்க மறுப்பதாகவும் கூறினர்.

மேலும், இது போன்ற வாய்மொழி கருத்துக்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் உரையாடல்கள்தான் என கூறிய அவர்கள், அவற்றில் பிழை இருக்கும்போது வக்கீல்கள் சுட்டிக்காட்டுவதாகவும் கருத்து தெரிவித்தனர்.

Next Story