மராட்டிய மாநிலத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி
ஜே.என்.1 வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயது நபருக்கு ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு லேசான பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜே.என்.1 வகை கொரோனா தொற்று, வேகமாக பரவக்கூடியது எனவும், அதேசமயம் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 21 ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பவுல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story