மும்பை சென்ட்ரல்-ஆமதாபாத் இடையே புதிய வந்தே பாரத் ரெயில்


மும்பை சென்ட்ரல்-ஆமதாபாத் இடையே புதிய வந்தே பாரத் ரெயில்
x

மும்பை சென்ட்ரல்-ஆமதாபாத் இடையே வந்தே பாரத் ரெயில் நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ளதாக மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

மும்பை,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி முதல் முறையாக மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. பயணிகளின் அமோக வரவேற்பை தொடர்ந்து மும்பையில் இருந்து சோலாப்பூர், ஜால்னா, ஷீரடி மற்றும் கோவா இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் இருந்து மும்பை சென்ட்ரலுக்கு 2-வது தடவையாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

இது பற்றி மேற்கு ரெயில்வே விடுத்துள்ள அறிக்கையில் செவ்வாய்கிழமை முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான விழா ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இதற்கான கால அட்டவணையில் தினசரி ஆமதாபாத்தில் இருந்து காலை 6.10 மணி அளவில் புறப்பட்டு மும்பை சென்டரலுக்கு 11.35 மணி அளவில் வந்து சேரும். மறுமார்க்கமாக மும்பை சென்டரலில் இருந்து பிற்பகல் 3.55 மணி அளவில் புறப்பட்டு ஆமதாபாத்விற்கு இரவு 9.25 மணி அளவில் வந்து சேரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story