மரத்தில் மோதி தீப்பிடித்த கார் - புதுமண தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு


மரத்தில் மோதி தீப்பிடித்த கார் - புதுமண தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு
x

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஹர்தா,

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக ஒரு குடும்பத்தினர் திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் வேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த தம்பதிக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கார் முற்றிலுமாக எரிந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story