தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது


தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது
x

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு சேவை திடீரென சிலமணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை,

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரெயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் பேர் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.

இதனிடையே, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு சேவை திடீரென இன்று சிலமணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 'தொழில்நுட்ப காரணங்களால் இ-டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், கோளாறு சரிசெய்யப்பட்டு விரைவில் முன்பதிவு இணையதள சேவை தொடங்கப்படும்' என்று ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், அறிவித்தது.

இந்த நிலையில், சுமார் 3 மணி நேரம் முடங்கி இருந்த ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Next Story