பெங்களூருவில் மழை வெள்ளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் சாவு: என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


பெங்களூருவில்  மழை வெள்ளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் சாவு: என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 May 2022 3:50 AM IST (Updated: 19 May 2022 4:21 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழைக்கு நீரில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழைக்கு நீரில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் என்ஜினீயர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 தொழிலாளா்கள் சாவு

பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உல்லால் உபநகர் அருகே உப்கார் லே-அவுட்டில் பஸ் நிறுத்தம் பகுதியில் காவிரி குடிநீருக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி 3 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் குழிக்குள் தண்ணீர் தேங்கியது. மழை தொடர்ந்து பெய்ததால் தொழிலாளர்களால் குழிக்குள் இருந்து வெளியே வர முடியாமல் போனது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்கள். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

4 பேர் மீது வழக்குப்பதிவு

இதுபற்றி அந்த தொழிலாளி, ஞானபாரதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். பின்னர் குழிக்குள் இருந்து 2 தொழிலாளர்களின் உடல்களையும் தீயணைப்பு படைவீரா்கள் மீட்டனர்.

போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவ் பரத், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அங்கித்குமார் என்று தெரியவந்தது. உயிர் தப்பிய தொழிலாளி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திரிலோகி என்று தெரிந்தது.இதுகுறித்து ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் திரிலோகி புகார் அளித்தார். அதன்பேரில், காவிரி குடிநீர் திட்டத்தை எடுத்து செயல்படுத்தி வரும் நிறுவனத்தின் மேலாளர் சிவக்குமார், என்ஜினீயர் ஹரீஷ் ரெட்டி, நரசிம்மராஜ், மனோஜ் யாதவ் ஆகிய 4 பேர் மீதும் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story