அசாம் வெள்ளம்; 9 பேர் உயிரிழப்பு : 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு


அசாம் வெள்ளம்; 9 பேர் உயிரிழப்பு : 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
x
தினத்தந்தி 19 May 2022 4:29 AM GMT (Updated: 19 May 2022 4:30 AM GMT)

அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் ,மேலும் 27 மாவட்டங்களில் 6.62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story