மராட்டியம்: டீசல் லாரியும், மரம் ஏற்றிச்சென்ற லாரியும், நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு !


மராட்டியம்: டீசல் லாரியும், மரம் ஏற்றிச்சென்ற லாரியும், நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு !
x
தினத்தந்தி 20 May 2022 2:00 PM IST (Updated: 20 May 2022 2:12 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் டீசல் லாரியும், மரம் ஏற்றிச்சென்ற லாரியும், நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மராட்டியம்,

மராட்டிய மாநிலம் சந்திராபூர் நகரின் புறநகர் பகுதியில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கரும், மரம் ஏற்றிச் சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று இரவு 10.30 மணியளவில் சந்திராபூர்-முல் சாலையில் இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார்.

விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினர், சில மணிநேரங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சந்திராபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story