காலிஸ்தான் ஆதரவாளர் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு: தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு


காலிஸ்தான் ஆதரவாளர் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு: தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு
x

கோப்புப்படம்

காலிஸ்தான் ஆதரவாளர் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாபில் தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளில் ஒன்றான 'வாரிஸ் பஞ்சாப் தே' எனும் அமைப்பை சேர்ந்த அம்ரித் பால் சிங் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் அவர் பிடிபட்டார். இதேபோல வேறுசில காலிஸ்தான் பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகிறார்கள்.

காலிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பாப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் அமைப்பு போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்ட கல்வாட்டி என்கிற பல்பீர் சிங் என்பவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பயங்கரவாதி என அறிவித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பல்பீர் சிங் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்காக அவர்கள் தனி தொடர்பு எண், வாட்ஸ்ஆப் எண், இமெயில் முகவரி வெளியிட்டு உள்ளனர்.


Next Story