காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்ட வழக்கில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்ட வழக்கில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்ட வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 12 இடங்களில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த ஆண்டு பயங்கரவாத சதி செயல்கள் மற்றும் நடவடிக்கைகளில் சில குழுக்கள் சதி திட்டம் தீட்டி ஈடுபடுகின்றனர் என உளவு தகவல் வெளிவந்தது.

பாகிஸ்தானில் இருந்து கொண்டு, பயங்கரவாத செயல்களை தூண்டி விடும் நபர்களுக்கு கைக்கூலிகளாக செயல்பட கூடிய, நாட்டின் தடை செய்யப்பட்ட மற்றும் அதனுடன் தொடர்புடைய, உள்ளிட்ட பிற அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் தரைநிலை பணியாளர்கள் இந்த சதி திட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்து உள்ளனர்.

இந்த தகவல் கிடைத்ததும் கடந்த ஆண்டே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இதுபற்றி ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு பெற்றி விசாரிக்க காஷ்மீரில் உள்ள 12 இடங்களில் என்.ஐ.ஏ.வின் பல்வேறு குழுக்களும் தனித்தனியாக பிரிந்து சென்று, பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் தரைநிலை பணியாளர்களின் இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் ஒருங்கிணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் காஷ்மீரின் இந்த வழக்குடன் தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுபோன்றதொரு சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்படி, குல்காம், புல்வாமா, அனந்த்நாக், சோப்பூர் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தினர்.

இதுபற்றி என்.ஐ.ஏ. வெளியிட்ட செய்தியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறுபான்மை சமூகத்தினர், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை இலக்காக கொண்டு இணையதள வழியேயான பயங்கரவாத தாக்குதல்களை அந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர். சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்களையும் அவர்கள் பரப்பி வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.


Next Story