தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற குஜராத்தில் 9 பேருக்கு வாழ்நாள் தடை

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற  குஜராத்தில் 9 பேருக்கு வாழ்நாள் தடை
x

அரசு துறைகளில் தாங்கள் பெற விரும்பும் தகவல்களை குடிமக்கள் அறிவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் வழிகோலுகிறது.

ஆமதாபாத்,

அரசு துறைகளில் தாங்கள் பெற விரும்பும் தகவல்களை குடிமக்கள் அறிவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் வழிகோலுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை துன்புறுத்தியதாக 9 பேரை கருப்பு பட்டியலில் வைப்பதாக அம்மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

அவர்களுக்கு இனிமேல் வாழ்நாள் முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எந்த தகவலும் பெற முடியாது. அந்த 9 பேருடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக ஹிதேஷ் படேல் என்பவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டவர்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் மனோஜ் சரபாதாதித்யா என்பவரும் அடங்குவார். அவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 150 விண்ணப்பங்களை அளித்திருந்தார்.

Next Story