வெடிபொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 9 பேர் பலி


வெடிபொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 9 பேர் பலி
x

வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் பஜார்ஹன் கிராமத்தில் வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்திய பாதுகாப்புத்துறைக்கும் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வெடிபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இத்தொழிற்சாலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். நிலக்கரி சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை ஊழியர்கள் கையாண்டபோது திடீரென அது வெடித்து சிதறின.

இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 9 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story