தொழில்நுட்ப புரட்சிதான் இந்தியாவை வழிநடத்தும்; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு


தொழில்நுட்ப புரட்சிதான் இந்தியாவை வழிநடத்தும்; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
x

அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப புரட்சிதான் இந்தியாவை வழிநடத்தும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

பெங்களூரு:

அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப புரட்சிதான் இந்தியாவை வழிநடத்தும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

தடுப்பூசி காப்புரிமை

பெங்களூருவில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியாவில் கிடைக்கும் டிஜிட்டல் அளவுமுறை கட்டமைப்புகள் வேறு எங்கும் இல்லை. இந்தியாவின் டிஜிட்டல் மதிப்பீடுகள் முழுவதும் அரசாங்கத்தால் கட்டமைக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் மதிப்பீடுகள் பொது நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. உலக பொருளாதார வளர்ச்சியை பார்க்கும்போது, தொற்றுநோய் காலக்கட்டத்திலும், அதற்கு பின்னரும் நிர்ணயித்த இலக்கை இந்தியாவால் அடைய முடிந்தது.

நம்முடைய பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணவேண்டும், செலவினங்களை எப்படி குறைக்கவேண்டும் என்பது நமக்கு தெரியும். நாம் தடுப்பூசிகளின் காப்புரிமைக்காக காத்திருக்கவில்லை. தடுப்பூசிகளை உருவாக்கியது இந்தியா தான். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

தொழில்நுட்ப புரட்சி

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் (ஸ்டாட்-அப்) இந்தியாவை முன்னோக்கிய பாதைக்கு அழைத்து செல்லும். மேலும் இவை புதுமையை புகுத்துவதற்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகிற்கே இந்தியா சேவை ஆற்றும் வண்ணம் அமைந்துள்ளது. தொடக்க நிலையில் உள்ள இந்த புதிய நிறுவனங்கள் அறிவு சார்ந்த இந்தியாவை உருவாக்கும். மேலும் மொழி மற்றும் எதிர்கால பாடத்தை கற்று கொடுக்கும்.

அதேபோல தொழில்நுட்ப புரட்சி மற்றும் வளர்ச்சிகள் வளர்ந்து வரும் நம் நாட்டிற்கு முக்கியத்துவமாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் மூலம் ஏற்படும் தொழில்நுட்ப புரட்சிகள்தான் நம்மை வழிநடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story