மாநிலங்களவை தேர்தல் - பெங்களூருவில் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்


மாநிலங்களவை தேர்தல் - பெங்களூருவில் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்
x

@nsitharaman

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிர்மலா சீதாராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

பெங்களூரு,

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

கர்நாடகத்தில் சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் ஆளும் பா.ஜனதாவுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. 4-வது இடத்தில் வெற்றி பெற எந்த கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை. இதனால் அந்த இடத்திற்கு இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் 2 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி மேலிடம் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அக்கட்சி சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.


Next Story