கர்நாடகத்திற்கு நிர்மலா சீதாராமன் துரோகம் செய்துவிட்டார்- சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்திற்கு நிர்மலா சீதாராமன் துரோகம் செய்துவிட்டார்- சித்தராமையா குற்றச்சாட்டு
x

நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரித்து கர்நாடகத்திற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் துரோகம் செய்துவிட்டதாக முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரித்து கர்நாடகத்திற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் துரோகம் செய்துவிட்டதாக முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும், நிதி வழங்கவில்லை என்று மாநில அரசு பொய் சொல்வதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்து முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மாநில அரசின் திட்டங்களுக்கு அவர்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்கக்கூடாது என்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் எஜமானர் தோரணையுடன் கூறியுள்ள கருத்தை நான் கண்டிக்கிறேன். அவரது கருத்து கன்னடர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். ஏதாவது செய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உத்தரவாத திட்டங்களை நிறுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம்.

இதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு தக்க பாடத்தை புகட்ட உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் மாநில அரசின் பரிந்துரைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார். இதன் மூலம் அவர் கர்நாடகத்திற்கு துரோகம் செய்துள்ளார்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story