"திருப்பதியில் நாளை 7 மணி நேரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.." - தேவஸ்தானம் அறிவிப்பு
வருகிற 17ம் தேதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
திருப்பதி,
ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஏழு மணி நேரத்திற்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவஸ்தான நிர்வாகம் கூறி உள்ளது.
வருகிற 17ம் தேதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதிகாலை நான்கரை மணி முதல் 11.30 மணி வரை வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், இந்த 7 மணி நேரத்திற்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை 11.30 மணிக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story