தீபாவளி காலகட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் கட்ட தேவையில்லை - புதிய உத்தரவு!


தீபாவளி காலகட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் கட்ட தேவையில்லை - புதிய உத்தரவு!
x

குஜராத்தில் அக்டோபர் 27 வரை, போக்குவரத்து போலீசார் மக்களிடம் அபராதம் வசூலிக்க மாட்டார்கள், பூ கொடுப்பார்கள்.

சூரத்,

தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என குஜராத் அரசு அறிவித்துள்ளது.

சூரத்தில் நேற்று பேசிய அம்மாநில உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலின் வழிகாட்டுதலின்படி, தீபாவளியின் போது மக்களுக்கு நிம்மதி அடையும் வகையில் மாநில உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.அதன்படி, அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை, குஜராத்தில் போக்குவரத்து போலீசார் மக்களிடம் அபராதம் வசூலிக்க மாட்டார்கள்.

இந்த காலகட்டத்தில் ஹெல்மெட், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் யாரேனும் பிடிபட்டாலோ அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்து விதிகளை யாராவது மீறுவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எங்கள் போலீசார் அபராதம் வசூலிக்க மாட்டார்கள், பூ கொடுப்பார்கள்.

இதனால் போக்குவரத்து விதிகளை பின்பற்றக்கூடாது என்று அர்த்தம் இல்லை. தவறு செய்தால் அபராதம் கட்ட தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story