ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை - நிர்மலா சீதாராமன்


ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 19 Sep 2023 10:58 AM GMT (Updated: 19 Sep 2023 11:48 AM GMT)

ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கவில்லை, ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே 2010ல் நிறைவேற்றப்பட்டது என்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்து மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது முற்றிலும் தவறான தகவல். இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி 3 முறை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story