முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - டெல்லி அரசு அறிவிப்பு


முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - டெல்லி அரசு அறிவிப்பு
x

முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் கிடையாது என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் இனி முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கொரோனா பராமரிப்பு மையங்களும் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

அதேநேரம் திருவிழா காலங்களில் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் தற்போது முகக்கவசம் அணியாதவர்களிடம்அபராதம் பெறப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story