கேரளாவில் 5-வது நாளாக நிபா பாதிப்பு இல்லை - மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்


கேரளாவில் 5-வது நாளாக நிபா பாதிப்பு இல்லை - மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2023 11:16 PM GMT (Updated: 22 Sep 2023 11:17 PM GMT)

தொடர்ந்து 5-வது நாளாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவை நிபா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 4 நாட்களாக புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்தது.

இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து 5-வது நாளாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் பெறப்பட்ட 27 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்கள் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

கோழிக்கோடு பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Next Story