கொரோனா காரணமாக ஒடிசாவில் சுதந்திர தின அணிவகுப்பு ரத்து


கொரோனா காரணமாக ஒடிசாவில் சுதந்திர தின அணிவகுப்பு ரத்து
x

கொரோனா சூழ்நிலை காரணமாக சுதந்திர தினத்தை எளிமையாக நடத்துவது என்றும், அணிவகுப்பு எதுவும் இடம்பெறாது என்றும் ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

புவனேஸ்வர்,

தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக சுதந்திர தினத்தை எளிமையாக நடத்துவது என்றும், அணிவகுப்பு எதுவும் இடம்பெறாது என்றும் ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறும் இந்த சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்பும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான அணிவகுப்பு மரியாதையும், போலீஸ் பாண்டு பங்கேற்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story