பா.ஜனதா சிவசேனாவை அழிக்க விரும்புவது ஏன்? சஞ்சய் ராவத் பேச்சு


பா.ஜனதா சிவசேனாவை அழிக்க விரும்புவது ஏன்? சஞ்சய் ராவத் பேச்சு
x

பா.ஜனதா சிவசேனாவை அழிக்க விரும்புவது ஏன் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா அதிருப்தி அணியினர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியை அமைத்து உள்ளனர். சிவசேனாவின் இந்துதுவா கொள்கையை காபாற்ற பா.ஜனதாவுடன் சேர்ந்ததாக அவர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் பா.ஜனதா சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் கட்சியை அழிக்க விரும்புவதாக சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " பா.ஜனதா சிவசேனாவில் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை. அவர்கள் சிவசேனாவை அழிக்க விரும்புகின்றனர். சிவசேனா இருக்கும் வரை மராட்டியத்தை 3 துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது. அவர்களால் மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க முடியாது. எனவே அவர்கள் சிவசேனாவை அழிக்க விரும்புகின்றனர். " என கூறினார்.


Next Story