'நாடாளுமன்றம், பிரதமரின் சொந்த வீடு அல்ல' - பெண் எம்.பி. ஆவேசம்


நாடாளுமன்றம், பிரதமரின் சொந்த வீடு அல்ல - பெண் எம்.பி. ஆவேசம்
x

கோப்புப்படம்

நாடாளுமன்றம், பிரதமரின் சொந்த வீடு அல்ல என்று பெண் எம்.பி. ஒருவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்றக்கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஜனாதிபதியை அழைக்காமல், பிரதமர் மோடியே புதிய நாடாளுமன்றக்கட்டிடத்தைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள், விழாவைப் புறக்கணிக்க உள்ளன. இதையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா டுவிட்டரில் ஆவேசக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஜனாதிபதிக்குத்தான் நாட்டின் முதல் இடம். துணை ஜனாதிபதிக்கு 2-வது இடம். பிரதமருக்கு 3-வது இடம்.

ஆனால் மத்திய அரசானது அரசியல் சாசனத்தின் அருமைகள் குறித்து ஒன்றும் அறியாது. இது பிரதமர் மோடி தனது சொந்தப் பணத்தைக் கொண்டு கட்டியுள்ள அவரது வீட்டின் புதுமனை புகுவிழா அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் 28-ந் தேதி நடக்கிற விழாவில் பங்கேற்காது. பா.ஜ.க.வுக்கு நல்ல அதிர்ஷ்டம் என்று அவர் கூறி உள்ளார்.

1 More update

Next Story