அவதூறு கருத்து: நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்


அவதூறு கருத்து: நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்
x

அவதூறு கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கொல்கத்தா,

பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா டி.வி. விவாத நிகழ்ச்சியில் பேசும்போது நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து மேற்கு வங்காளத்தில் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடந்தது. சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களின்போது வன்முறை வெடித்து பொது சொத்துகள் சேதம் அடைந்தது.

இதையடுத்து நுபுர் சர்மா மீது கொல்கத்தாவின் நர்கெல்டங்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. வருகிற 20-ந் தேதிக்குள் ஆஜராகும்படி அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே மராட்டிய மாநிலத்தின் பிவண்டி போலீசார் நுபுர்சர்மாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதற்கு கால அவகாசம் கேட்டிருந்தார் நுபுர் சர்மா. இந்த நிலையில் மேற்கு வங்காளத்திலும் அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story