தேசிய தேர்வு முகமை இணையதளம் பாதுகாப்பாக உள்ளது - அதிகாரிகள் விளக்கம்


தேசிய தேர்வு முகமை இணையதளம் பாதுகாப்பாக உள்ளது - அதிகாரிகள் விளக்கம்
x

கோப்புப்படம்

முடக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும் தேசிய தேர்வு முகமை இணையதளம் பாதுகாப்பாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு, நெட் தேர்வு ரத்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் தேசிய தேர்வு முகமை பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

இந்த நிலையில் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதை தேர்வு முகமை மறுத்து உள்ளது.

தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மற்றும் அதன் இணைய போர்ட்டல்கள் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், முடக்கம் தொடர்பான செய்திகள் தவறானவை என்றும் தேர்வு முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story