ஆபாச வீடியோகால் அழைப்பு: நிர்வாண அழகியுடன் பேசிய முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம் பறிப்பு


ஆபாச வீடியோகால் அழைப்பு: நிர்வாண அழகியுடன் பேசிய முதியவரை மிரட்டி ரூ.7 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 20 May 2023 3:15 AM IST (Updated: 20 May 2023 3:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து ஏற்பட்ட பழக்கத்தில் அந்த பெண் ஒருநாள் வீடியோ காலில் ஆபாசமாக முதியவர் முன் தோன்றினார்.

புதுடெல்லி,

டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் கே.என்.ஜோஷி (வயது 75). இவரது செல்போனுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு பெண் தொடர்பு கொண்டு தன்னை அஞ்சலி சர்மா என அறிமுகப்படுத்தி பேச தொடங்கினார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பழக்கத்தில் அந்த பெண் ஒருநாள் வீடியோ காலில் ஆபாசமாக முதியவர் முன் தோன்றினார். அதன்பிறகு இந்த வீடியோ காட்சியில் முதியவர் இருக்கும் படத்தை அவருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டினார். இதனால் பயந்து போன முதியவர் அந்த எண்ணை துண்டித்தார். இதன்பிறகு சிலநாட்கள் கழித்து போலீஸ் அதிகாரி என்று கூறி பேசிய மர்மநபர், உங்கள் ஆபாச படங்கள் இணையதளத்தில் பரவிவிட்டது. அதை நீக்குவதற்காக பாஜிராவ் எனபவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார். அந்த நபர், ரூ.64,500 பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மோசடி கும்பலைச் சேர்ந்த அஜய்குமார் ககட், தன்னை துணை கமிஷனர் எனக்கூறி ஆபாச வீடியோ அழகியின் தாயார் ஆபாச படம் வெளியானதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த வழக்கில் சிக்கிக் கொண்டீர்கள் என்று கூறி மிரட்டத் தொடங்கினார். அந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக கூறி ரூ.6 லட்சம் பெறப்பட்டது. இப்படி மொத்தம் ரூ.7.34 லட்சத்தை இழந்த முதியவர் அதற்குமேல் பணம் கொடுக்க முடியாமல் போலீசை அணுகினார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story