அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசாவில் பொது விடுமுறை!


அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசாவில் பொது விடுமுறை!
x

நாடு முழுவதும் அக்டோபர் 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

புவனேஸ்வர்,

நாடு முழுவதும் அக்டோபர் 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. வருகிற 25-ந்தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும்.இந்த சூரிய கிரகணம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்களில் இருந்து மக்கள் பாதுகாத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா மாநில அரசு, அக்டோபர் 25ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், கோர்ட்டுகள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் செவ்வாய்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது.


Next Story