ஒடிசா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச 'வை-பை' வசதி


ஒடிசா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச வை-பை வசதி
x

கோப்புப்படம்

ஒடிசா மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச ‘வை-பை’ வசதி அளிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு இலவசமாக 'வை-பை' வசதி வழங்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், ஒடிசா பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 2023-24 கல்வியாண்டு முதல் இலவச 'வை-பை' வசதி வழங்கப்படும் என மாநில உயர் கல்வித்துறை மந்திரி ரோகித் பூஜாரி தெரிவித்தார். மாணவர்கள் தலா ஒரு ஜி.பி. டேட்டாவை பெறுவார்கள் என்ற அவர், இதுதொடர்பாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநில மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து அரசு பல்கலைக்கழங்களிலும் இப்போது 'வை-பை' வசதி உள்ளது.

மாணவர்களுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் ஒரு சதவீத வட்டியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள வட்டித்தொகையை அரசு அளிக்கிறது என்று அவர் கூறினார்.


Next Story