கஞ்சா கடத்தலில் போலீசார் ஈடுபட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல்


கஞ்சா கடத்தலில் போலீசார் ஈடுபட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல்
x

கோப்புப்படம் 

ஒடிசாவில் கஞ்சா கடத்தலில் போலீசார் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் போலீசார் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் பிரிங்கியா காவல் நிலையத்திற்குள் புகுந்து சூறையாடியதுடன், பல ஆவணங்களுக்கு தீ வைத்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூர் மக்கள் சிலர், புல்பானி-பிரிங்கியா-பாலிகுடா சாலையை முற்றுகையிட்டதால், அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களிடம் பேசுவதற்காக சாலை மறியல் நடந்த இடத்திற்குச் சென்ற சில காவலர்களும் விரட்டியடிக்கப்பட்டனர் என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

நிலமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். சில கஞ்சா வியாபாரிகள் பிரிங்கியா காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story