ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 292 ஆக உயர்வு


ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 292 ஆக உயர்வு
x

கோப்புப்படம்

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது.

பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 2 பயணிகள் ரெயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

நாட்டை உலுக்கிய இந்த அதிபயங்கர விபத்தில் 287 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 1,200-க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஒடிசா ரெயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பாலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த பல்டு நஸ்கர் என்ற 24 வயது இளைஞர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது.


Next Story