ஒடிசா ரெயில் விபத்து - முதல் விசாரணை அறிக்கையின் பிரத்யேக தகவல்கள் வெளியானது


ஒடிசா ரெயில் விபத்து - முதல் விசாரணை அறிக்கையின் பிரத்யேக தகவல்கள் வெளியானது
x
தினத்தந்தி 4 Jun 2023 6:26 PM IST (Updated: 4 Jun 2023 6:54 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா ரெயில் விபத்து குறித்த முதல் நிலை விசாரணை அறிக்கையின் பிரத்யேக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து குறித்த முதல் நிலை விசாரணை அறிக்கையின் பிரத்யேக தகவல்கள் தந்தி டிவிக்கு கிடைத்தது

அதில் ,

ஜூலை 3 மாலை 6.55 மணிக்கு விபத்து நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.கோரமண்டல் ரெயில் 21 பெட்டிகள் தடம் புரண்டன . சில பெட்டிகள் கவிழ்ந்து விட்டன. பாஹாநாகா பஜார் நிலையத்தில்' சரக்கு ரெயிலை நிறுத்துவதற்கு பாயிண்ட் 17 ஏ மாற்றப்பட்டது. பேனல் போர்டில் புள்ளிகள் சரியாக காட்டின . ஆனால் தண்டவாளம் மீண்டும் மெயின் லைனுக்கு மாறவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்றதாகவும் ஒடிசா கோரம்ண்டல் விபத்தின் முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story