பிஏ.2.38 என்கிற புதிய கொரோனாவால் ஆபத்தா? மத்திய அரசு விளக்கம்


பிஏ.2.38 என்கிற புதிய கொரோனாவால் ஆபத்தா? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 11 July 2022 12:21 AM GMT (Updated: 11 July 2022 12:22 AM GMT)

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவி வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவி வருகிறது.

ஒமைக்ரான் வைரசின் துணை வைரஸ்களில் ஒன்றான பிஏ.2.38 பரவல் இந்தியாவில் உள்ளது. இந்த வைரசால் ஆபத்தா, இது பெரிதான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய அரசின் அமைப்பான இன்சாகாக் என்கிற இந்திய சார்ஸ் கோவ் 2 மரபணு வரிசைப்படுத்தல் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

பிஏ.2. வைரஸ், பிஏ.2.38 என மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ், சமீபத்திய வரிசைமுறை தொகுதிகளில் பரவலாக உள்ள துணை பரம்பரை என தெரிகிறது. இந்த வைரசால் இதுவரை ஆஸ்பத்திரி சேர்க்கைகள் அதிகரிக்கவில்லை. நோய் தீவிரமும் ஏற்படவில்லை. சமீபத்தில் நேரிட்டுள்ள சிறிய அளவிலான இறப்புகள்கூட இணைநோய்களால் ஏற்பட்டவைதான். கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றுவது தொற்று பரவலை குறைக்கும். கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வைரசால் ஆபத்து எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.


Next Story