சொல்வதற்கு வருந்துகிறேன்...! கட்சி முன் ஒரு முகம், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகம்- சசிதரூரை தாக்கிய காங்கிரஸ்


சொல்வதற்கு வருந்துகிறேன்...! கட்சி முன் ஒரு முகம், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகம்- சசிதரூரை தாக்கிய காங்கிரஸ்
x

சொல்வதற்கு வருந்துகிறேன்...! காங்கிரஸ் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சசிதரூர் அணி இரு முகங்களை காட்டியதாக கட்சியின் தேர்தல் ஆணையத் தலைவர் கூறி உள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் புதிய தேசிய தலைவராக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரு குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒரு தலைவர் நாட்டின் பழமையான கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நேரு குடும்பத்தை சேராத சீதாராம் கேசரி இருந்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த முறை கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் சசி தரூரை வீழ்த்தி மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றார். மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர்.

இது குறித்து சசி தரூர் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவராக பதவியேற்பது மிகவும் கவுரவமானது. அது மிகப்பெரிய பொறுப்பாகும். இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றுள்ளார். இறுதித் தீர்ப்பு கார்கேவுக்கு சாதகமாக அமைந்தது. காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவரை மனதார வாழ்த்த விரும்புகிறேன் என கூறி இருந்தார்.

ஓட்டுப்பதிவில் 416 செல்லாத வாக்குகளும் இருந்தன அதில் சில சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. அதில் சில சசிதரூர் பெயருக்கு அருகில் இதயம் மற்ரும் அம்பு வரையப்பட்டு உள்ளது.

மற்றொரு வாக்குச்சீட்டில் கார்கேவின் பெயருக்கு முன் ஸ்வஸ்திகாவும், தரூரின் பெயருக்கு அடுத்ததாக ஒரு முத்திரையும் இருந்தது, இது வாக்காளரின் விருப்பத்திற்கும் கடவுளின் விருப்பத்திற்கும் இடையிலான குழப்பத்தை குறிக்கிறது.

பல செல்லாத வாக்குச் சீட்டில் ராகுல் காந்தி பெயர் எழுதப்பட்டு இருந்தது.

மொத்த வாக்குகளில் 12 சதவீத வாக்குகளைப் பெற்றதில் சசி தரூர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அவருக்கு ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து அவர் அதிக வாக்குகளைப் பெற்றார், ஏனெனில் அனைத்து வாக்குச் சீட்டுகளும் கலக்கப்பட்டதால், எந்த மாநிலத்தில் இருந்து எந்தெந்த வேட்பாளர்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில் மல்லிகார்ஜுன் கார்கேவை எதிர்த்து போட்டியிட்டு தேர்தலில் தோல்வியுற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூரை காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கடுமையாக சாடியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தரூர் மற்றும் அவரது குழுவினர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினர் இதற்கு மிஸ்திரி கூறியதாவது:-

உங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், இருந்தபோதிலும், மத்திய தேர்தல் ஆணையம் உங்களுக்கு எதிராக சதி செய்வதாக ஊடகங்களிடம் தெரிவித்தீர்கள்

சசிதரூர் தேர்தல் குழுவின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டுகிறார். எங்கள் பதில்கள் அனைத்திலும் நீங்கள் திருப்தியடைகிறீர்கள் என்று எனக்கு முன் ஒரு முகமும், எங்களுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊடகங்களில் வேறு முகமும் இருந்தது என்று கூறுவதற்கு நான் வருந்துகிறேன் என கூறினார்.


Next Story