காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால் லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள் வருவார்கள் - ஜெய்ராம் ரமேஷ்


காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா வெளியேறினால்  லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள்  வருவார்கள் -  ஜெய்ராம் ரமேஷ்
x

மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். இந்தநிலையில், மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த முரளி தியோரா. அவரது மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைந்தார்.

இந்தநிலையில், மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஒரு மிலிந்த் தியோரா வெளியேறுவார். ஆனால் லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேருவார்கள். காங்கிரசை இது எந்த வகையிலும் பாதிக்காது. இந்த முடிவு பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Next Story