மத்திய பிரதேசம் தேசிய பூங்கா காட்டிற்குள் மேலும் ஒரு சிவிங்கிபுலி விடுவிப்பு

image courtesy: @byadavbjp twitter
மத்திய பிரதேசம் தேசிய பூங்கா காட்டிற்குள் மேலும் ஒரு சிவிங்கிபுலி விடுவிக்கப்பட்டுள்ளது.
போபால்,
இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிபுலிகளை மீட்டெக்கும் லட்சிய திட்டம் அறிமுகமானது. அதன்படி தென்ஆப்பிரிக்கா மற்றும் நமீபியாவை சேர்ந்த 20 சிவிங்கிபுலிகள் மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு நம் நாட்டு காலநிலைக்கு பழக்கப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கண்காணிப்பில் இருந்து வந்த நீர்வா என்னும் பெண் சிவிங்கிபுலியை காட்டிற்குள் சுதந்திரமாக விட்டுள்ளனர். இதனால் சுதந்திரமாக திரிய விடப்பட்டுள்ள சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 3 சிவிங்கிபுலிகள் இறந்தநிலையில் மீதமுள்ள சிவிங்கிபுலிகளை விடுவிப்பது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story