"ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்" - மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு


ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் - மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு
x
தினத்தந்தி 3 May 2023 6:01 AM GMT (Updated: 3 May 2023 6:20 AM GMT)

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தலங்களின் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊடகங்கள் அது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடங்களில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள் விளம்பரம் செய்ய துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். வெளிப்புறங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் பந்தயம் தொடர்பான விளம்பரங்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story