டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 57 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே பதிவு..!!


டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 57 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே பதிவு..!!
x

கடந்த மூன்று ஆண்டுகளில் டெல்லியில் சுமார் 57 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திருமணம் செய்து வருகின்றனர். குறிப்பாக தேசிய தலைநகரில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மற்றும் ஜனவரி முதல் மார்ச் இடையே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சில சுபநாட்களில் டெல்லியில் நடைபெறும் திருமண எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும், இதனால் திருமண ஊர்வலங்களின் போது டெல்லி சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படுகிறது.

ஆனால் டெல்லியில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ பதிவுகளில் பிரதிபலிக்கவில்லை. ஆம், ஆச்சரியமளிக்கும் வகையில் வருவாய்த் துறை தரவுகளின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் டெல்லியில் சுமார் 57 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான டெல்லி மக்கள், விசா அல்லது பிற நோக்கங்களுக்காக திருமணச் சான்றிதழ் தேவைப்படும் வரை தங்கள் திருமணங்களைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story