பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியும்: பரூக் அப்துல்லா


பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியும்: பரூக் அப்துல்லா
x

கோப்புப்படம் 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளதுதாகவும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் பருக் அப்துல்லா கூறினார்.

லகான்பூர்,

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளது, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மட்டுமே அதை முடிவுக்குக் கொண்டுவர முடியும். பேச்சுவார்த்தைக்கு நாம் முயற்சி செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் (பாஜக அரசு) தயக்கம் காட்டுகிறார்கள்.

பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் நம் நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாமல் வெறுப்பை பரப்புகின்றனர். மேலும், "மக்களின் இதயங்களில் இருந்து வெறுப்பை அகற்றாவிட்டால், நேர்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தொடங்கியதில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் மந்திரிகள் கூட அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர்.

எனது மந்திரிகளில் ஒருவரின் காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியது. மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக அவர்கள் கொல்லப்பட்டனர். 1947ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தேர்வு செய்ய எங்களுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் நாங்கள் கவுரவமாக வாழ்வோம் என்று நம்பியதால் இந்தியாவை விரும்பினோம்.

நாட்டில் எவ்வளவு வெறுப்பை பரப்புகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அதிலேயே மூழ்கிவிடுவார்கள். நமக்கு ஒரு மருந்து வேண்டும். அன்பின் செய்தியை பரப்ப வேண்டும். மசூதிகளிலும் கோவில்களிலும் மட்டும் அல்லாமல் அனைவரின் இதயங்களிலும் இறைவன் வாழ்கிறார். நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story