புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு..!!
கடும் வெயில் காரணமாக புதுச்சேரியில் வரும் 14-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் சராசரியாக 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதனிடையே அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவை மாநிலத்திலும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை நீடிக்கப்படுமா என்று கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் கோடை வெயில் தாக்கம் காரணமாக, புதுச்சேரியில் 1 முதல் 12 வகுப்பு வரை ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story