'தேர்தல் ஆணையம் சுதந்திரமானது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும்' - சிவராஜ் சிங் சவுகான்


Election Commission is independent Shivraj Singh Chouhan
x

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடியது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், நாடாளுமன்ற தேர்தலில் விதிஷா மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 8,21,408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடியது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"நமது தேர்தல் ஆணையம் சுதந்திரமானது மற்றும் நடுநிலையானது என்பது உலகத்திற்கே தெரியும். எதிர்கட்சிகளுக்கும் இது நன்றாக தெரியும். ஆனால் சில நேரங்களில் அவர்கள் இதை ஏற்றுக்கொள்வது இல்லை. இந்தியாவின் ஜனநாயகம் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள் இந்தியாவின் சிறப்பம்சமாகும். வாக்குகளின் சக்தியால் நமது நாட்டில் பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன."

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

1 More update

Next Story