காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகளின் கூட்டம்: சோனியா காந்தியை சந்தித்த பின் லாலு பிரசாத் யாதவ் பேட்டி!


காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகளின் கூட்டம்: சோனியா காந்தியை சந்தித்த பின் லாலு பிரசாத் யாதவ் பேட்டி!
x

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் இன்று சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் இன்று சந்தித்து பேசினர். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு சோனியா காந்தியை நிதிஷ் குமார் முதல் முறையாக சந்தித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் சோனியா காந்தியை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோனியா காந்தியை சந்தித்த பிறகு நிதிஷ் குமாரும் - லாலு பிரசாத் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது,

"காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுப்பார். அதில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வழி குறித்து ஆலோசிக்கப்படும் என்று சோனியா காந்தி உறுதியளித்தார்.

பாஜகவை அகற்றி நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இதனால் தான் எதிர்க்கட்சிகள் நாங்கள் ஒன்றுபட வேண்டும்" என்றார்.


Next Story