குறிப்பிட்ட தொகுதிகளில் கூட்டணி: "எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்" - உமர் அப்துல்லா


குறிப்பிட்ட தொகுதிகளில் கூட்டணி: எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன் - உமர் அப்துல்லா
x

குறிப்பிட்ட தொகுதிகளில் கூட்டணி என்று கூறிய தனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றும் பின்வாங்க மாட்டோம் என்றும் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு,

காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லா, டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில், பா.ஜ.க. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மெகபூபா முப்தியின் 'மக்கள் ஜனநாயக கட்சியை' கலக்கத்தில் ஆழ்த்தியது.

ஆனால் கூட்டணியில் நீடிக்கும் மெகபூபா, அவரது இந்த கருத்துக்கு எந்த பதிலும் கூறவில்லை. ஆனால் 'தங்கள் தரப்பு அவரது பேச்சால் மகிழ்ச்சி அடையவில்லை' என்று அந்த கட்சியின் பிரபலங்கள் சிலர் தெரிவித்தனர்.

"ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டு எடுக்கும் நோக்கில் 2019-ல் உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டணியை அவரது கருத்து சிதைக்கும்" என்று மெகபூபா கட்சியினர் சிலர் தெரிவித்தனர்.

ஆனால் "தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், பின்வாங்க மாட்டோம். கூட்டணியில் இருப்பதால் எனது கருத்தை பதிவு செய்ய வேண்டியது எனது கடமை. அதை ஏற்பதோ மறுப்பதோ கூட்டணி மற்றும் அதில் உள்ளவர்களின் சொந்த விருப்பம்" என்று உமர்அப்துல்லா நேற்று மீண்டும் செய்தியாளர்களிடம் கூறினார்.


Next Story